தோனியை நேரில் சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி - வைரலாகும் வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி நேரில் சந்தித்தனர்.
டெல்லி - சென்னை அணி நேருக்கு நேர் மோதல்
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கிய 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு வருகின்றன.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி 6 வெற்றியும், 4 தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்கள் விளையாடியுள்ளது. இதில், 4 வெற்றியும், 6 தோல்வியும் அடைந்துள்ளது. புள்ளி நிலவரப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
தோனியை சந்தித்த பொம்மன், பெள்ளி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஆஸ்கர் விருது வென்ற ஆவணக் குறும்படமான ‘Elephant Whisperers'-ல் நடித்த பொம்மன், பெள்ளி மற்றும் அதன் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் ஆகியோருடன் சென்னை கேப்டன் தோனியை சந்தித்தார். ஆஸ்கர் விருது வென்ற அவர்களுக்கு தோனி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர்களுடன் சிறிது நேரம் சிரித்து பேசி மகிழ்ந்தார். இதன் பின்பு, அவர்களுக்கு தன்னுடைய சட்டையை அவர்களுக்கு பரிசாக கொடுத்தார். பின்னர், தோனியுடன் பொம்மனும், பெள்ளியும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tudumm ? Special occasion with very special people ??#WhistlePodu #Yellove ? pic.twitter.com/AippVaY6IO
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023