தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானம்- தோனிக்கு பரிசாக வழங்கிய ரசிகர்
தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தின் மாதிரியை தோனிக்கு ரசிகர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார்.
CSK ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தோனி
16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸும் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.
இப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இப்போட்டி முடிந்த பின்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரும், தோனியும் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
தோனிக்கு பரிசு வழங்கிய ரசிகர்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தின் மாதிரியை, சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரசிகர் ஒருவர் பரிசாக வழங்கியுள்ளார். அந்த பரிசை தோனி வியந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
A fan gifts a miniature of chepauk stadium to MS Dhoni ???
— ??? ⁷ (@cric_not_out) May 19, 2023
Yellove Army is the best ever ?#MSDhoni? #IPLPlayOffs pic.twitter.com/KaJTIWFQAh