இறுதிப்போட்டியில் விளையாட தோனிக்கு தடையா? வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்
இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி விளையாட தடை விதிக்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடுவரிடம் வாதம் செய்த தோனி
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நெறுங்கிவிட்டது. இந்நிலையில், இறுதிச் சுற்றுக்கு நுழைய குஜராத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பயங்கரமான போட்டி நிலவியது.
இப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது குஜராத்துக்கு எதிரான நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்று ஆட்டகாரரான வேகபந்து வீச்சாளர் பதிரானா விளையாடினார். அவர் விளையாடிவிட்டு ஒரு கட்டத்தில் வெளியேறிவிட்டார்.
பின்னர், 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் மைதானத்திற்குள் விளையாட வந்தார். அப்போது, தோனி அவரை பார்த்து பந்து வீச அழைத்தார். உடனே நடுவர் பதிரானாவை பந்து வீச அனுமதிக்காமல் தடுத்தனர்.
இதனால் தோனி அப்செட்டாகி, நடுவரிடம் நேராக சென்று வாதத்தில் ஈடுபட்டார். உடனே சக வீரர்களும் நடுவரிடம் வந்து வாதத்தை முன்வைத்தனர். 9 நிமிடங்கள் கழித்து நடுவர் பதிரானாவை பந்து வீச அனுமதித்தார்.
இறுதிப் போட்டிக்கு தடையா?
இதனால், நேர்த்தை வீணடித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் மெதுவாக பந்து வீசியதற்கு தோனி மீது ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்தது. இதனையடுத்து, இந்தப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளது.
ஆனால், நடுவர்கள் தோனி மீது குற்றம் சுமத்தினால், வரும் மே 28ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் தோனி இறுதிப்போட்டியில் விளையாடவே முடியாது. தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Pathirana Was Doubtful About What's Happening There, But Rutu Knows What Dhoni Was Doing That's Why He is Laughing ?? pic.twitter.com/3bYjnuz9ek
— VijayAlif ???️MSD (@VijayAlif5) May 25, 2023