வலியால் அவதிப்படும் தோனி - மருத்துவர்கள் சொன்ன பரிந்துரை!
வலியால் அவதிப்படும் தோனிக்கு மருத்துவர்கள் காயத்திற்காக சில பரிந்துரைகள் சொன்ன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வலியால் அவதிப்படும் தோனி
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன.
இதனையடுத்து களத்தில் இறங்கிய சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி மாபெரும் சாதனைப் படைத்தது. ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் தோனிக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டாலும், வலியை பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு தன் அணி வெற்றிக்காக போராடி வெற்றி கோப்பை பெற்று சாதனைப் படைத்தார்.
தன் அறையில் முழங்காலில் கட்டுப்போட்டுக் கொண்டிருந்த ரகசிய கேமரா தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தற்போது தோனி எலும்பியல் மருத்துவ நிபுணரிடம் காயத்தன்மை குறித்து ஆலோசனை கேட்டுள்ளதாகவும், இதற்காக மும்பை செல்ல உள்ளதாகவும், இந்த காயத்திலிருந்து மீள ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் செய்யலாமா, வேண்டாமா என்பதை தோனி முடிவு செய்ய இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.