தோனி குப்பையை கூட பொக்கிஷமாக மாற்றிவிடுவார்- மேத்யூ ஹைடன் புகழாரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி குப்பையை கூட பொக்கிஷமாக மாற்றிவிடுவார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி
இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வெற்றி பெறப்போவது சிஎஸ்கே அணியா, குஜராத் அணியா என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தோனிக்கு மேத்யூ ஹைடன் புகழாரம்
இந்நிலையில், அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தோனி ஒரு மேஜிக் மேன். வேண்டாம் என்று குப்பையில் எறியப்படும் பொருளை கூட பொக்கிஷமாக மாற்றிவிடுவார். எப்போதும் தோனி ஒரு நேர்மறையான எண்ணம் கொண்ட கேப்டன். அணி வீரர்களை சரியான முறையில் கையாளும் திறன் கொண்டவர்.
இந்திய அணிக்கு விளையாடும்போது என்ன செய்தாரோ அதைத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் செய்து வருகிறார். அவர் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, இல்லையா என்பது குறித்தெல்லாம் பேசுவது தேவையற்றது. முடிவு அவர் கையில்தான் இருக்கிறது என்றார்.