தோனியை பார்த்து அப்பா.... அப்பா... என்று கத்திய மகள் - வைரலாகும் வீடியோ!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியை பார்த்த உடன் அவரது மகள் அப்பா.... அப்பா... என்று கத்திய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்தில் தோனி
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
அப்பா... அப்பா... என்று கத்திய தோனி மகள்
நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில், இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது. இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3-வது முறையாக வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற போட்டியை காண சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷியும், அவரது மகள் ஜிவா வந்தனர்.
ஆட்டத்தின் நடுவே தோனியை பார்த்ததும் மகள் ஜிவா, கையை காட்டி அப்பா... அப்பா... என்று கத்தி கூச்சல் போட்டாள்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
#ViratKohli vs #MSDhoni?
— ? SONIYA KAPOOR ? (@IAMSONIYA787) April 18, 2023
Chennai Super Kings Won by 8 Runs Vs Warriors RCB.
Missing "The King" Ms Dhoni’s ( Sixers king )adorable cheerleader...??#RCBvsCSK Rahane pic.twitter.com/GgR5vJU11A