டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனை படைத்த தோனி!
டி20 போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி, அனைத்து வித கிரிக்கெட்டிலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டவர்.
ஓய்வு பெற்று பிறகு தற்போது ஐபிஎல் டி20 போட்டிகளில் விளையாடி வரும் அவர், அதிக கேட்சுகளை டி20 கிரிக்கெட்டில் பிடித்து இமாலய சாதனையை படைத்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிராவோவின் ஓவரில், ஷர்துல் தாக்கூரின் கேட்சை பிடித்தது தோனிக்கு 200வது கேட்சாக அமைந்தது. அவருக்கு அடுத்தபடியாக அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் உள்ளார்.
மேலும், தோனி 358 டி20 கிரிக்கெட்டில் 284 பேரை ஆட்டமிழக்க செய்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 129 கேட்சுகளை பிடித்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர்கள்:
- எம்.எஸ்.தோனி (200)
- தினேஷ் கார்த்திக் (182)
- கம்ரான் அக்மல் (172)
- குவிண்டன் டிகாக் (166)
- தினேஷ் ராம்தின் (150)