எதிர்காலத்தில் என்னவாக ஆசை? தோனி மகள் ஜிவாவின் பதில்
எதிர்காலத்தில் தான் என்னவாக விரும்புகிறேன் என தோனி மகள் ஜிவா பதிலளித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் CSK அணிக்காக விளையாடி வருகிறார். மற்ற நேரங்களை தனது குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் ஹரித்வார் சென்றிருந்தார்.
ஜிவா தோனியின் எதிர்கால ஆசை
அந்த பயணத்தின் போது, கங்கா சபாவின் செயலாளர் ஜிவாவிடம் வளர்ந்ததும் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த ஜிவா, இயற்கை ஆர்வலராக ஆக விரும்புகிறேன் என தெரிவித்தார்.
அதைக்கேட்ட அவர், "10 வயதிலே இந்த தேர்வு தனித்துவமானது" என அவர் தெரிவித்தார். "அவள் அப்படி ஆகிவிடுவாள் என்று நம்புகிறேன்" என சாக்ஷி தோனி கூறினார்.
ஏற்கனேவே சாக்ஷி தோனி முன்னர் அளித்த நேர்காணலில் ஒன்றில், ஜிவா எங்கள் இருவரையும் ஓரளவுக்கு நேசிப்பவர். தற்போது அவர் ஒரு இயற்கை ஆர்வலராக மாற ஆர்வமாக உள்ளார். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் குறித்து அவருக்கு நிறைய கேள்விகள் உள்ளன" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |