அடுத்த ஐபிஎல்-லில் தோனி நிச்சயம் விளையாடுவார்! ரகசியம் உடைத்த மொயின் அலி
தோனி அடுத்த ஐபிஎல்-லில் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
தோனி ஓய்வு
இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த கேப்டன் தோனி அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஐபிஎல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.
இதற்கிடையே ஐபிஎல் தொடரில் இருந்தும் தோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று விடுவார் என பல்வேறு தகவல்கள் அவ்வப்போது உலாவி வருகிறது.
AP
இதற்கு தோனி தரப்பில் இருந்து மட்டுமில்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் இருந்தும் எந்த தெளிவான விளக்கமும் இதுவரை தரப்படவில்லை.
இந்நிலையில் தோனி அடுத்த ஐபிஎல்-லில் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐபிஎல்-லில் நிச்சயம் தோனி இருப்பார்
இது தொடர்பாக பேசியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மொயின் அலி, தோனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் அவருக்கு தலைக்கனம் என்பது சிறிது கூட இல்லை, அவர் மிகவும் தாழ்மையானவர், எதைப் பற்றி வேண்டுமானாலும் அவரிடம் நீங்கள் பேசலாம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தொலைக்காட்சியில் நீங்கள் பார்ப்பது போன்றே நிஜத்திலும் அவரது குணம் உள்ளது, மேலும் அவர் நிச்சியமாக அடுத்த ஐபிஎல்-லில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.