உலகக்கோப்பைக்கு ரோகித்தை வேண்டாம் எனக் கூறிய தோனி! 12 ஆண்டுகால மர்மத்தை உடைத்த தேர்வாளர்
2011ஆம் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தெரிவு செய்யப்படாதது கேப்டன் தோனியின் முடிவு தான் என முன்னாள் தேர்வாளர் தெரிவித்துள்ளார்.
தோனியின் தெரிவு
இந்திய கிரிக்கெட் அணி தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்று அசத்தியது.
இந்த தொடரில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. தற்போது அவர் இடம்பெறாதது தோனியின் முடிவு தான் என தெரிய வந்துள்ளது.
அப்போது தேர்வுக்குழு உறுப்பினரான ராஜா வெங்கட் 12 ஆண்டுகால மர்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
File Photo
மர்மத்தை உடைத்த முன்னாள் தேர்வாளர்
ராஜா வெங்கட் இதுகுறித்து கூறுகையில், 'நாங்கள் அணியைத் தேர்வு செய்ய அமர்ந்தபோது, ரோகித் விடயங்களின் திட்டத்தில் இருந்தார். அணியைத் தேர்ந்தெடுக்கும்போது 15வது வீரராக ரோகித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்தோம். கேரி கிரிஸ்டனும் அதை உணர்ந்தார்.
ஆனால் கேப்டன் (தோனி) பியூஷ் சாவ்லாவை தெரிவு செய்ய விரும்பினார். அதனை ஒரு சிறந்த தேர்வு எனக் கூறியதால் ரோகித் தெரிவு செய்யப்படவில்லை.
இதனை ரோகித்திடம் கூற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் அவரை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தோம். எனினும் தோனியின் முடிவை ஏற்றுக் கொண்டோம்' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |