தனக்காக சென்னை அணி பெரும் தொகையை இழப்பதை தோனி விரும்பவில்லை! வெளிப்படுத்திய சிஎஸ்கே உரிமையாளர்
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் வீரர்களை தக்க வைக்கும் கொள்கைக்கு தோனி எதிரானவர் என சிஎஸ்கே உரிமையாளர் சீனவாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
2022-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைக்கும் விதிகள் சமீபத்தில் வெளியானது.
அதன் படி, ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம்.
ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதாவது 3 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 இந்திய வீரர்கள் என தக்கவைத்து கொள்ளலாம்.
ஒரு அணி 4 வீரர்களை தக்க வைத்தால் முதலில் தேர்வு செய்யும் வீரருக்கு மட்டும் ரூ 16 கோடி செலவிட வேண்டும். 3 வீரர்களை தக்க வைத்தால் முதலில் தேர்வு செய்யும் வீரருக்கு 15 கோடி, 1 அல்லது 2 வீரர்களை தக்க வைத்தால் 14 கோடி செலவிட வேண்டும்.
சிஎஸ்கே அணி 3 முதல் 4 வீரர்களை தக்க வைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போல் அணி தோனியை அதிக தொகை கொடுத்து முதலில் தக்க வைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இந்நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் வீரர்களை தக்க வைக்கும் கொள்கைக்கு தோனி எதிரானவர் என சிஎஸ்கே உரிமையாளர் சீனவாசன் வெளிப்படுத்தியுள்ளார்.
தோனி நியாயமான நபர், தன்னைத் தக்க வைத்துக் கொள்ள சிஎஸ்கே பெரும் தொகையை இழப்பத்தை அவர் விரும்பாததால், 2022 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைக்கும் கொள்கை வெளியிடட்டும் என இருந்தார்.
அதனால்தான் அவர் அனைவருக்கும் வித்தியாசமான பதிலை அளித்தார் என்று சீனிவாசன் கூறினார்.