நீண்டநாள் தவத்தை கலைத்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி! வைரலாகும் வீடியோ
மகேந்திர சிங் தோனி பண்ணையில் டிராக்டர் ஓட்டி வயலை உழும் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி
இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் தோனி எப்போதாவதுதான் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்வார். கடைசியாக தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி தன்னுடைய பண்ணையில் இருந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறித்து சாப்பிடும் வீடியோவை பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நீண்டநாள் தவத்தை கலைத்தது போல தோனி நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
வயலை உழும் காட்சிகள்
அந்த வீடியோவில், தோனி டிராக்டர் ஓட்டி தன்னுடைய பண்ணையில் வயலை உழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த பதிவில் அவர், 'புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி. ஆனால் வேலையை முடிக்கத்தான் அதிக நேரம் எடுத்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டோடு வேளான் பணிகளை செய்தும் வருமானம் ஈட்டும் தோனி ஸ்டாபெரி சாகுபடி செய்து ஜார்கண்ட் மாநில அரசின் கவனத்தை ஈர்த்துள்ளார்.