எளிதான கேட்சை தவறவிட்ட சிஎஸ்கே கேப்டன் தோனி! பந்துவீசிய ஜடேஜா தந்த ரியாக்ஷன்... வைரல் வீடியோ
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி எளிதான கேட்சை தவற விட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் ஒரு கட்டத்தில் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஜடேஜா பந்துவீசினார், பந்தானது பேட்டில் உரசி விக்கெட் கீப்பரும், கேப்டனுமான தோனியிடம் சென்றது.
— Patidarfan (@patidarfan) May 1, 2022
எளிதான அந்த கேட்சை தோனி பிடிக்காமல் தவறவிட்டார். இதனால் அதிருப்தியடைந்தார் ஜடேஜா, தலையில் கை வைத்தபடி அதை வெளிப்படுத்தினார். 41 வயதான தோனி விக்கெட் கீப்பிங்கில் கேட்ச் செய்வதில் வல்லவர் என பெயரெடுத்தவர்.
இப்படி எப்போதாவது ஒருமுறை தான் அவர் கேட்சை மிஸ் செய்வார்.
தோனி கேட்சை தவற விட்டதால் தொடர்ந்து விளையாடிய வில்லியம்சன் 47 ரன்கள் எடுத்தார், பின்னர் பிரிடோரியஸ் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.