ஓடி வந்த ரசிகருடன் விளையாடிய தோனி - லைக்குகளை அள்ளி தெறிக்கும் ரசிகர்கள்
ஓடி வந்த ரசிகருடன் விளையாடிய தோனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாதனை படைத்த தோனி
10 அணிகள் பங்கேற்று விளையாடும் 16-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 12 நகரங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு இந்த ஐபிஎல் போட்டி கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிக் கொண்டன. அப்போட்டியில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் துடுப்பாட்டம் செய்தபோது, மிக விரைவாக தோனி ரன்அவுட் செய்தார். இதன் மூலம் அதிக ரன் அவுட் செய்த சாதனையை தோனி படைத்துள்ளார்.
ரசிகருடன் விளையாடிய தோனி
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ரசிகர் ஒருவர் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனியை நோக்கி ஓடி வந்தார். ரசிகர் ஓடி வருவதைப் பார்த்த தோனி அவரிடம் பிடிப்படாமல் ஓடினார். ரசிகரும் விடாமல் தோனியை துரத்தினார். ஆனாலும், தோனி ரசிகருக்கு ஆட்டம் காட்டினார்.
மைதானத்தில் இருந்தவர்கள் ரசிகரை தடுத்து நிறுத்த ஒரு கட்டத்தில் தோனி, ரசிகரிடம் வந்து கையை குலுக்கி புகைப்படம் எடுத்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் எங்கள் தோனி எப்போதும் மாஸ் தான் என்று வர்ணித்து லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
MS Dhoni said, "thanks alot to the Eden Gardens crowd. They came to give me a farewell".
— Karthik™ (@im_karthik777) April 23, 2023
😭😭😭😭
We gonna miss him in yellow too 🥺@msdhoni#KKRvsCSK #MSDhoni pic.twitter.com/RdhLpyLpi9