நடுவரிடம் வாக்குவாதம் செய்த டோனி! அடித்து துவைத்த டெல்லி: வைரலாகும் வீடியோ
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், டோனி நடுவர்களிடம் வாக்குவாததில் ஈடுபட்ட வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் பிளே ஆப் போட்டியில், சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும், தோல்வி பெறும் அணி கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெற்று வரும் அணியுடன் மோதும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அது இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
Thala Dhoni giving warning to umpire ?#CSKvsDC #IPL2021 pic.twitter.com/tOGdFw80ML
— ?✈️ (@Gkumaarrrr) October 10, 2021
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 60 ஓட்டங்களும், ஹிட்மயர் 37 ஓட்டங்களும், கடைசி கட்டத்தில் சென்னை அணியின் பந்து வீச்சை அடித்து துவைத்த ரிஷப் பாண்ட் அவுட்டாகமல் 51 ஓட்டங்களும் குவித்தார்.
அதன் பின் ஆடிய சென்னை அணி 19.4 பந்தில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில், டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, போட்டியின் இரண்டாம் கட்ட இடைவேளை விட்ட போது, சென்னை அணியின் தலைவரான டோனி, நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏனெனில், பிராவோ வீசிய ஓவரின் போது, நடுவர்களால் வைட் கொடுக்கப்பட்டது.
ஆனால், அது இல்லை என்பதை டோனி குறிப்பிட்டு காட்டியதாகவும், அதற்காகவே அவர் நடுவரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.