டோனியின் ஈகோவை உரசிப் பார்த்த பந்து வீச்சாளர்! ஒரே அடியால் சிக்ஸர் பறக்கவிட்டதன் காரணம் இது தானாம்
ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், டோனி சிக்ஸர் அடித்ததற்கு முக்கிய காரணமே அந்த பந்து வீச்சாளர் தான் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், சென்னை அணியின் தலைவரான டோனி, வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.
டோனி இது போன்று சிக்ஸர் அடிப்பதை பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதால், இதை ரசிகர்கள் டிரண்டாக்கினர். டோனி இப்படி சிக்ஸர் அடிப்பதற்கு முக்கிய காரணமே அந்த ஓவர் வீசிய சித்தார்த் கவுல் தான் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், சித்தார்த் கவுல் வீசிய கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் மூன்று பந்தில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. அப்போது ஸ்டிரைக்கில் நின்றது டோனி என்பதால், பிரசர் அதிகமானது.
முதல் மூன்று பந்துகளையும் ஓவர் தி விக்கெட்டில் வீசிய கவுல், நான்காவது பந்தை அரவுண்ட் தி விக்கெட் வந்து வீசினார்.
இது தான் டோனியின் வேகத்தையும், கோபத்தையும், ஆக்ரோஷத்தையும், சொல்லப்போனால் ஈகோவையும் டச் செய்துவிட்டது என்று கூறலாம்.
இதனால் அடுத்த பந்திலே டோனி சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.