சென்னையில் தோனி- ஆர்ப்பரித்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
தனது குடும்பத்தினருடன் சென்னை வந்த எம்எஸ் தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் சீசன்களில் இதுவரையிலும் 5 முறை கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி.
சமீபத்தில் 42வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி, குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார், அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் படம் LGM.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது, இதில் பங்கேற்பதற்காகவே மனைவி சாக்ஷியுடன் சென்னை வந்துள்ளார் தோனி.
ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்துடன் வந்த தோனியிடம், நபர் ஒருவர் அறுவை சிகிச்சை பற்றி கேள்வி எழுப்ப, நலம் என்பது போல் சைகை காட்டியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thala Dhoni in Chennai for the Audio and Trailer launch of his first production Movie LGM ?#MSDhoni #LGM pic.twitter.com/hzwwcOcfAN
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) July 9, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |