தமிழர் பண்பாடான வேட்டி சட்டையில் ஜொலித்த M.S தோனி! CSK வெளியிட்ட வைரல் புகைப்படம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி வேட்டி சட்டையுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் திருவிழா
மார்ச் 22ம் திகதி 18வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Saareyy! Thala Mass’u! 🦁🔥😎#WhistlePodu 🦁💛 pic.twitter.com/9YfawufaeA
— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2025
இளம் வீரர்களுடன் இணைந்து சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி-யும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தோனி பயிற்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வேட்டி சட்டையில் எம்.எஸ் தோனி
இந்நிலையில், தல தோனி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் இருக்கும் புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது.
தோனி வேட்டி சட்டை புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனி புதிய தோற்றம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையில், தனது நண்பரின் திருமணத்தில் தோனி கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே வேட்டி சட்டை அணிந்திருந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |