தோனிக்கு ரூ.200 கோடி இழப்பா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை அணியின் அணித்தலைவராக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால், எஞ்சிய போட்டிகளுக்கு தோனி அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
7 போட்டிகளில் விளையாடி, அதில் 5 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை அணி.
தோனி
இந்நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய, எதிர்வரும் 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் சென்னை அணி மும்பையை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், தோனி பல கோடிகளை இழக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தோனி கிரிக்கெட் விளையாடுவதை சில நிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார்.
எலக்ட்ரிக் கார்கள் மூலம் முக்கிய நகரங்களில் வாடகை கார் சேவையை வழங்கிய BluSmart என்ற நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் ரூ.4,100 கோடி வரை முதலீடு செய்தனர்.
சேவையை நிறுத்தும் BluSmart
இதில், தோனி ஏறத்தாழ ரூ.200 கோடிகளை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகை தீபிகா படுகோனே, தொழிலதிபர் சஞ்சீவ் பஜாஜ் உள்ளிட்ட பலரும் முதலீடு செய்துள்ளனர்.
சமீபத்தில் இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தின் நிறுவனர்களான அன்மோல் சிங், ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி, நிறுவனத்தின் பெயரில் வாங்கிய கடனில் ரூ.260 கோடியை வைத்து, ஆடம்பர கார், சொகுசு வீடு, கோல்ப் உபகணரணங்கள் வாங்கி உள்ளதோடு வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
இதனால், நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், இந்த முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக தோனி, தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்கள், முதலீடு செய்த பணத்தை இழக்கும் நிலையில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |