உலகக் கோப்பையில் தோனி & ஜடேஜா சாதனையை முறியடித்த நெதர்லாந்து வீரர்கள்
இலங்கைக்கு எதிரான 19 -வது லீக் போட்டியில் விளையாடிய நெதர்லாந்து வீரர்கள், தோனி – ஜடேஜா சாதனையை முறியடித்துள்ளனர்.
சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் & லோகன் வான் பீக்
19 -வது கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓடவுட் களமிறங்கினர். இதில், விக்ரம்ஜித் சிங் 4 ரன்களில் அவுட் ஆனார்.
பின்னர், கொலின் அக்கர்மேன் நிதானமாக களமிறங்கினார். அதற்குள், மேக்ஸ் ஓடவுட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு பாஸ் டி லீட் களமிறங்கினார்.அதற்குள்ளாக கொலின் அக்கர்மேன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு வந்த லீட் 6 ரன்களிலும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இதனால் 21.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் மட்டுமே நெதர்லாந்து எடுத்திருந்தது.
இதனைத்தொடர்ந்து, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் லோகன் வான் பீக் நிதானமாக களமிறங்கி 7 -வது விக்கெட்டிற்கு 130 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியின் சாதனை உலகக்கோப்பை வரலாற்றை சாதனை படைத்துள்ளது.
இறுதியாக நெதர்லாந்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் குவித்தனர்.
தோனி & ஜடேஜா
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தோனி & ஜடேஜா 7 -வது விக்கெட்டில் இணைந்து விளையாடினர். இவர்கள் இருவரும் இணைந்து 116 ரன்கள் எடுத்தனர்.
தற்போது, தோனி & ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை முறியடித்து நெதர்லாந்து வீரர்கள் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் & லோகன் வான் பீக் இணைந்து 130 ரன்கள் குவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |