டோனி என்னிடம் இதைப் பற்றி தான் பேசினார்! முதன் முறையாக மெளனம் கலைத்த தமிழன் நடராஜன்
இந்திய அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான நடராஜன் டோனியிடம் பேசியது குறித்து முதன் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.
இந்திய அணியில் தற்போது ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார் நடராஜன். அவுஸ்திரேலியா அணிக்கெதிரான தொடர்கள், இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டிகள் என நடராஜன் தன்னுடைய திறமையை நாளுக்கு நாள் வளர்த்து கொண்டு வருகிறார்.
இதனால் இவர் நிச்சயம் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பிடிப்பார் என்று நம்பப்படுகிறது. தற்போது ஐபிஎல் தொடருக்காக ஹைதராபாத் அணிக்கு விளையாடி வரும் நடராஜன், ஐபிஎல் தொடரில் டோனியிடம் பேசிய அனுபவம் குறித்து இப்போது கூறியுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பின்பு, டோனியிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர் மாதிரியான ஆளுமைகளுடன் பேசுவதே பெரிய விஷயம். அவர் எனது பிட்னஸ் குறித்து நிறைய பேசியிருந்தார்.
எனக்கு ஊக்கம் கொடுத்தார். விளையாடுவதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்கள்தான் நம்மை மேம்படுத்தும்.
பந்து வீசும்போது பவுன்சர், கட்டர் என பேட்ஸ்மேன்கள் நினைக்காத நேரத்தில் பந்துவீச்சில் வேரியேஷன்களை கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார்.
அவர் அன்று கூறிய அந்த விஷயங்கள் எனக்கு இப்போது பெரிதும் உதவியாக இருக்கிறது என்று நடராஜன் கூறியுள்ளார்.
