டோனி-கோஹ்லி குறித்து ஒரே வார்த்தையில் செம பதில் கொடுத்த சூர்யகுமார்யாதவ்! என்ன சொல்லியிருக்கார் பாருங்க
இந்திய அணி வீரரான சூர்யகுமார் யாதவ் டோனி மற்றும் கோஹ்லி குறித்த ரசிகரின் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கொடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு பல ஐசிசி தொடர்களை வென்று கொடுத்து சாதனை படைத்தவர் டோனி, குறிப்பாக இந்தியர்களின் பல ஆண்டு கனவான ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை என வென்று கொடுத்து பல சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார் டோனி.
டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு கோஹ்லி அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால் ரசிகர்களிடையே டோனியா? கோஹ்லியா? என்ற வாக்குவாதம் அடிக்கடி செல்லும்.
அந்த வகையில், தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரராக வளர்ந்து வரும் சூர்யகுமார் யாதவ்விடம் ரசிகர் ஒருவர், கோஹ்லி மற்றும் டோனி குறித்து ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்க, அதற்கு சூருயகுமார் யாதவ், கோஹ்லி ஒரு இன்ஸ்பிரேஷன், டோனி ஒரு லெஜெண்ட் என்று பதிலளித்தார்.
அதே போன்று ரோகித் குறித்து கேட்கப்பட்டதற்கு ஹிட்மேன் என்று அவர் ஒரு வார்த்தையில் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.