தோனியின் வெளியுலகம் அறிந்திராத தொழில் முயற்சிகள்... வாயைப்பிளக்கவைக்கும் அவரின் சொத்து மதிப்பு
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான எம்.எஸ் தோனி விளையாட்டு தொடர்பான பல தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும், பரவலாக அறியப்படாத இன்னும் சில முதன்மை தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
சொத்து மதிப்பு ரூ.1040 கோடி
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போதைய சி.எஸ்.கே அணித் தலைவருமான மகேந்திர சிங் தோனி கோடீஸ்வர இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1040 கோடிக்கும் அதிகம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மட்டும் தனது மொத்த வருவாய்க்கும் காரணமாக அமையவில்லை. மாறாக பல்வேறு தொழில் முயற்சிகள், முதலீடுகள் ஆகியவையால் வாயைப்பிளக்கவைக்கும் இந்த சொத்துக்களை திரட்டியுள்ளார்.
தோனிக்கு சொந்தமாக ஆயத்த ஆடை பிராண்ட் ஒன்றும் உள்ளது. விளையாட்டு தொடர்பான நிறுவனம் ஒன்றையும் முன்னெடுத்து வருகிறார். நாட்டின் முதன்மையான நிறுவனங்களுக்கு விளம்பரதாரராகவும் செயல்பட்டு வருகிறார்.
அத்துடன், பரவலாக அறியப்படாத தொழில் முதலீடுகளையும் அவர் முன்னெடுக்கிறார். ராஞ்சி நகரில் அவருக்கு ஹொட்டல் ஒன்று உள்ளது. பெங்களூருவில் சர்வதேச தரத்தில் ஒரு பாடசாலையில் செயல்பட்டு வருகிறது.
சத்யா நாதெல்லாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம்
தோனிக்கு சொந்தமாக சாக்லேட் நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. ஹொட்டல் மஹி ரெசிடென்சி என்ற பெயரில் சில வருடங்களுக்கு முன்பு ராஞ்சியில் உணவம் ஒன்றை திறந்துள்ளார்.
பெங்களூருவில் செயல்பட்டுவரும் தோனியின் பாடசாலைக்கு சத்யா நாதெல்லாவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் மாணவர்களுக்கு மாறுபட்ட மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பாடத்திட்டத்தை வழங்குகிறது.
7Ink என்ற பெயரில் குளிர்பான நிறுவனம் ஒன்றும், Copter 7 என்ற பெயரில் சாக்லேட் நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மட்டுமின்றி, தோனி Sportsfit என்ற பெயரில் இந்தியாவின் 200 பகுதிகளில் உடற்பயிற்சி கூடங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் தமிழ் திரைப்படம் மொன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |