ஜடேஜாவை தூக்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் விட்ட தோனி! உணர்ச்சிகள் நிறைந்த சி.எஸ்.கே தருணங்கள்
கடைசி பந்தில் சென்னை அணியை வெற்றிபெறவைத்துவிட்டு ஓடிவந்த ஜடேஜாவை கட்டிப்பிடித்து தூக்கிய ஆனந்த கண்ணீருடன் நெகிழ்ந்த தருணத்தை விடியோவாக CSK ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி வழக்கமாக கொண்டாட்டங்களை வெளிப்படுத்துவதில்லை. அணி வெற்றிபெற்றாலும், தோற்றாலும் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொண்டதில்லை.
ஆனால், நேற்று IPL 2023-ன் இறுதிப்போட்டியில் சென்னை அணி எதிர்பாராத வெற்றியை பெற்றபோது உணச்சிவசத்தில் ஆனந்த கண்ணீரில் மிதந்தார்.
Chennai Super Kings @ChennaiIPL
ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி திங்கள்கிழமை (மே 29) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி 5-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் என்பதால் சென்னை அணி வீரர்கள் ஒவ்வொருவரும் உயிரைக்கொடுத்து விளையாடினர்.
அதே வேகத்தில் களமிறங்கிய தோனிக்கு முதல் பந்திலேயே வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. கடும் சோகத்தில் யாரிடமும் பேசாமல் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின் களமிறங்கிய ஜடேஜா கடைசி 2 பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து சென்னைக்கு கோர்ப்பையை வென்று கொடுத்தார்.
Chennai Super Kings @ChennaiIPL
அரங்கத்தில் அதிகபட்சமாய் நிறைந்திருந்த சென்னை ரசிகர்கள் கூச்சலிட, சென்னை அணி வீரர்கள் மைதானத்திற்குள் ஓட அமைதியாய் எழுந்துவந்து தோனியை நோக்கி ஜடேஜா துள்ளி வந்து கட்டிப்பிடித்தார்.
தன்னை மறந்த தோனி ஜடேஜாவை தூக்கிக்கொண்டு ஆனந்த கனி வடித்தார். எத்தனையோ சூழ்நிலையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திய பார்க்கப்பட்ட தோனி நேற்று அளவற்ற உணச்சியில் காணப்பட்டார்.
Chennai Super Kings @ChennaiIPL
சென்னை அணியில் ஒவ்வொருவரும் உணர்ச்சிவசத்தில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். நரேந்திர மோடி மைதானத்தில் அனைவரும் உணச்சிவசத்தில் இருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட சில விலைமதிப்பற்ற தருணங்களை விடியோவாக வெளியிட்டுள்ளது சிஎஸ்கே.
Happy Tears ?#CHAMPION5 #WhistlePodu #Yellove ?pic.twitter.com/jf05fszEDA
— Chennai Super Kings (@ChennaiIPL) May 30, 2023
5️⃣INALLY THE CELEBRATIONS! ?#CHAMPION5 #WhistlePodu #Yellove ?? pic.twitter.com/I8fl6siQ2e
— Chennai Super Kings (@ChennaiIPL) May 30, 2023
Dhoni Lifts Jadeja, CSK, IPL 2023 Finals, Dhoni Emotional, Dhoni Happy Tears