டோனியே பிரம்மித்து போய் பார்த்த ஆட்டம்! கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து மிரட்டிய ஷாருக்கான்: சாம்பியன் ஆன தமிழ்நாடு
இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடரான சையது முஷ்டாக் அலி டிராபியின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றதை டோனி பார்த்து ரசித்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மாநில அணிகளுக்கிடையே நடைபெறும் 20 ஓவர் கொண்ட சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் கடந்த 4-ஆம் திகதி முதல் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் நடப்பு சாம்பியன் ஆன தமிழக அணியும், கர்நாடக அணியும் மோதின. அதன் படி முதலில் ஆடிய கர்நாடாக அணிக்கு துவக்க வீரரான ரோகன் கடம் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுக்க, அதன் பின் அவரைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய கருண்நாயர் 14 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, மூன்றாவதாக மற்றொரு துவக்க வீரரும், அணியின் கேப்டனுமான மணீஷ் பாண்டே 15 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகியதால், கர்நாடகா அணி ஒரு கட்டத்தில் 5.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ஓட்டங்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.'
அதன் பின் கடைசி கட்டத்தில் அபினஷ் மனோகர் மற்றும் பிரவீன் டூபே தமிழக அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியதால், கர்நாடகா அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் எடுத்தது. கர்நாடகா அணியில் அதிகபட்சமாக அபினஷ் மனோகர் 37 பந்தில் 46 ஓட்டங்களும், பிரவீன் டூபே 25 பந்தில் 33 ஓட்டங்களும் குவித்தனர்.
தமிழக அணியில் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷார் 4 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணிக்கு துவக்க வீரரான ஹரி நிஷாந்த்(23), மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 12 பந்தில் 9 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு துவக்க வீரர் நாராயண ஜெகதீசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
இதனால் தமிழக அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் சென்றது. அற்புதமாக விளையாடி வந்த நாராயண ஜெகதீசன் 41 ஓட்டங்களில் அவுட் ஆக, கடைசி கட்டத்தில் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பாக தமிழக அணிக்கு கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவை என்ற போது, களத்தில் ஷாருக்கான் மற்றும் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷார் களத்தில் இருந்தனர்.
Last ball 6⃣ ??? in Finals#TNvsKAR #SMATFinal #SyedMushtaqAliT20 #SyedMushtaqAliTrophy2021 pic.twitter.com/7spdPYlmFo
— Raghu (@PrabhasDHF__) November 22, 2021
இதில் முதல் பந்தில் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷார் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் ஒரு ஓட்டம், மூன்றாவது பந்து அகலப்பந்தாக மாற, மீண்டும் வீசப்பட்ட மூன்றாவது பந்தில் ஒரு ஓட்டம், நான்காவது பந்தில் 1 ஓட்டம், 5-வது பந்தில் 2 ஓட்டம் எடுக்க, கடைசி பந்தில் தமிழக அணியின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அப்போது களத்தில் நின்ற ஷாருக்கான் அற்புதமாக சிக்ஸர் பறக்கவிட்டு அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இதன் மூலம் தமிழக அணி மீண்டும் சாம்பியன் ஆனது. இந்த போட்டியை டோனி தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த புகைப்படமும் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.