CSK கேப்டன் பதவியை விட்டு கொடுக்கவுள்ள டோனி? யாருக்கு தெரியுமா? கசிந்த தகவல்
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வருபவர் டோனி. இடையில் சூதாட்ட விவகாரம் தொடர்பாக சென்னை அணி தடை செய்யப்பட்ட காலத்தை தவிர, இப்போது வரை டோனி தான் சென்னை அணியின் மாஸ் கேப்டனாக உள்ளார்.
இருப்பினும் தன்னுடைய பார்ம் காரணமாக, இந்த ஆண்டு ஏலத்தில் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களில் இரண்டாவதாக தன்னை எடுக்கும் படி டோனி கூறியிருந்தார்.
The @ChennaiIPL retention list is out! ?
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
Take a look! ?#VIVOIPLRetention pic.twitter.com/3uyOJeabb6
அதன் படி முதல் ஆளாக சென்னை அணி 16 கோடிக்கு ரவீந்திர ஜடேஜாவையும், 12 கோடிக்கு டோனியையும், 8 கோடிக்கு மொயின் அலியையும், ருத்ராஜ் கெய்க்வாட்டை 6 கோடிக்கும் தக்க வைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில், தற்போது டோனி தன்னுடைய கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரும் காலங்களில் சென்னை அணியில் சில சுமூகமான மாற்றங்களை காணலம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.