தோனி படத்தின் தாக்கம் - விற்பனையாளர் வேலையை விட்டு கிரிக்கெட்டிற்கு வந்த பாகிஸ்தான் வீரர்
தோனி படம் பார்த்த பிறகு, விற்பனையாளர் வேலையை விட்டு விலகி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
தோனி படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக இருந்த மஹேந்திர சிங் தோனி, வெற்றிகரமான அணித்தலைவர் என போற்றப்படுகிறார்.

கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி வெள்ளை பந்து (White Ball) கோப்பைகளையும் வென்ற ஒரே அணித்தலைவர் தோனி மட்டுமே.
அவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து, எம் எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி (MSDhoni The Untold Story) என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது.

ரயில்வேயில் டிக்கெட் சேகரிப்பாளராக பணியாற்றி வந்த தோனி, கிரிக்கெட் வீரராக மாறியது காட்டும் இந்த படம் பலருக்கு சாதிக்கும் ஊக்கத்தை ஏற்படுத்தும்.
இதே போல், தோனி படத்தை பார்த்த விற்பனையாளர் ஒருவர் பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரராக மாறிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
உஸ்மான் தாரிக்
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக்(Usman tariq), கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் அணியில் இடம்பெற முயற்சித்துள்ளார்.

ஆனால், அவரின் பந்துவீச்சை சரியில்லை எனக்கூறி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டதால், அவர் கிரிக்கெட்டை விட்டுவிட்டு துபாய் சென்று விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
அதன் பின்னர், தோனி படத்தை பிறகு தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகம் கிடைத்ததால், தனது விற்பனையாளர் வேலையை விட்டு வந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார்.
2025 CPL தொடரில் 20 விக்கெட்களை வீழ்த்தி கவனம் பெற்றதால், பாகிஸ்தான் தேசிய அணியில் இடம் கிடைத்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        