இரவு நேரத்தில் அசத்திய டோனி! சக வீரர்களுடன் ஜாலி... வைரல் வீடியோ
டோனி தனது புதிய காரில் இரவில் சக வீரர்களுடன் ஜாலியாக பயணித்த வீடியோ வைரலாகியுள்ளது.
ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார்.
சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் புதிதாக வாங்கிய எஸ்யூவியில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
New Beast added to @msdhoni car collection! ?? pic.twitter.com/Zs87U0yFmi
— DIPTI MSDIAN (@Diptiranjan_7) November 17, 2022
டோனி சமீபத்தில் என்ற காரை வாங்கியுள்ளார். இது முழுக்க மின்சார கார் ஆகும். இது தொடர்பான வீடியோவில் ராஞ்சியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் அணி வீரர் கேதர் ஜாதவ் ஆகியோருடன் எம்எஸ் டோனி காணப்பட்டார்.
சிஎஸ்கே வீரர்கள் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடுவதற்காக வந்திருந்தனர். இருவரும் டோனியை சந்தித்தது மட்டுமல்லாமல், அவரது புதிய எஸ்யூவியில் பயணம் செய்யும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்றனர்.