போல்டாகி அவுட் ஆன போது பென் ஸ்டோக்ஸ் என கூறிய டோனி? கண்டுபிடித்த ரசிகர்கள்: வைரலாகும் வீடியோ
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், அவுட் ஆன பின்பு டோனி கூறிய வார்த்தையின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின் ஆடிய பஞ்சாப் அணி 13 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்து அசால்ட்டாக வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன கே.எல்.ராகுல் 42 பந்தில் 98 ஓட்டங்கள் குவித்தார்.
Is Dhoni saying 'Ben stokes' ???pic.twitter.com/CRXQQglAPZ#CSKvsPBKS
— Prayag (@theprayagtiwari) October 7, 2021
இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் டோனி அவுட் ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயி வீசிய ஓவரை எதிர் கொண்ட டோனி, முதலில் அற்புதமாக ஆடினார். அதன் பின் அவர் பந்திலே போல்டாகி வெளியேறினார்.
அப்போது இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் பெயரை கூறினார். இதை ஏன் டோனி கூறினார் என்று தெரியவில்லை. ஆனால், இதைக் கண்டுபிடித்த வீரர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.