தோனியின் நம்பிக்கையை ரெய்னா இழந்துட்டார்! அன்னிக்கு நடந்த சம்பவம்.. ரகசியம் உடைக்கும் பிரபல வீரர்
சுரேஷ் ரெய்னாவை ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி எடுக்காதது தொடர்பில் நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டூல் பேசியுள்ளார்.
சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னா எந்த அணியினாலும் ஏலம் எடுக்கப்படவில்லை. அற்புதமான ஐபிஎல் சாதனையைப் பெருமையாகக் கொண்ட ரெய்னா ஐபிஎல் ஏலத்தில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது ரசிகர்களுக்கு பெரிய ஷாக் தான்.
முக்கியமாக ரெய்னா பல ஆண்டுகளாக சார்ந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அவரை கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பிரபல வர்ணனையாளருமான சைமன் டூல், ஐபிஎல் தொடர் யுஏஇயில் முதல் முறை நடந்த போது ரெய்னா கோபித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி வந்தார்.
தோனிக்கு கொடுக்கும் அதே அறை உள்ளிட்ட வசதிகள் தனக்கும் தேவை என்று அவர் டிமாண்ட் செய்ததாகவும் அது இல்லாததால் கோபப்பட்டு வந்ததாகவும் செய்திகள் அடிபட்டன, ஆனால் ஸ்ரீநிவாசனும் இதை உறுதி செய்யவில்லை ரெய்னாவும் வாய் திறக்கவில்லை, இதுதான் ரெய்னா இந்த ஏலத்தில் புறக்கப்பட்டதற்கு முதன்மை காரணம் என்கிறார் சைமன் டூல்.
இதில் 2 முதல் 3 பாகங்கள் உள்ளன என்று கூறும் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அந்தச் சம்பவத்தினால் தன் மீதான தோனியின் நம்பிக்கையை ரெய்னா இழந்தார்.
மற்ற அணிகளை விட சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் விசுவாசத்தை ரெய்னா இழந்தார் என கூறியுள்ளார்.