இது Dhoni review system! பேட்டிங் ஆடிய மும்பை வீரருக்கு நாட்-அவுட் கொடுத்த நடுவர்... ரிவ்யூ கேட்டு விக்கெட்டை தூக்கிய டோனியின் வீடியோ
ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் பேட்டிங் ஆடிய மும்பை வீரர் பேடில் பந்து பட்டதற்கு நடுவர் அவுட் கொடுக்க மறுத்த நிலையில் ரிவ்யூ கேட்டு அந்த விக்கெட்டை டோனி எடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது, மும்பை அணி துடுப்பாட்டம் ஆடிய போது தீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் டிகாக் பந்தை மிஸ் செய்ததால் அது அவர்களது பேடில் பட்டது.
அதற்கு சென்னை அணி அப்பீல் செய்ய அம்பயர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் நாட்-அவுட் கொடுத்தார்.
உடனடியாக சென்னை அணியின் கேப்டன் டோனி, அம்பயரின் முடிவுக்கு எதிராக ரிவ்யூ சென்றார். அது டிவி அம்பயர் ரிவ்யூவில் பந்து ஸ்டம்பில் பட்டது தெளிவானது.
அதன் மூலம் சென்னை அணி முதல் விக்கெட்டை கைப்பற்றியது. DRS டோனி ரிவ்யூ சிஸ்டம் என ரசிகர்கள் சொல்வதுண்டு, அதெற்கேற்றார் போல நேற்றைய போட்டியிலும் அதை அவர் நிரூபித்துள்ளார்.
DRS king👑 Dhoni Review system🔥 #WhistlePodu @ChennaiIPL @msdhoni pic.twitter.com/TBWCbfeTWE
— Arman Sharief_07 (@arman_sharief) September 20, 2021