ரெய்னா மகனை விமானநிலையத்தில் பார்த்த டோனி என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் வீடியோ
சென்னை அணி ஐபிஎல் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிளம்பிய நிலையில், விமானநிலையத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக ஐபிஎல் அணியைச் சேர்ந்த சிலர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுவிட்டனர்.
இதில் சென்னை அணி வீரர்களான டோனி, ரெய்னா மற்றும் சிலர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விரைந்தனர். இது தொடர்பான புகைப்படங்களை அந்தணி நிர்வாகம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
Dhoni and Sakshi playing with our newest cub Rio Raina ??@MSDhoni | @ImRaina | #WhistlePodu pic.twitter.com/wxRIYncRom
— DHONI Trends™ 19:29 ❤️ (@TrendsDhoni) August 14, 2021
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்னை அணி புறப்படுவதற்காக விமானநிலையத்தில் காத்துக் கொண்டிருந்தது.
அப்போது டோனி, ஷாக்சி மற்றும் அவரது மகள் ஜீவா, அங்கிருந்த ரெய்னாவின் மகனான ரியோ ரெய்னாவுடன் கொஞ்சி விளையாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.