வெற்றியோடு திரும்பிய டோனிக்கு சல்யூட் அடித்த ஸ்டாப்! பதில் சல்யூட் அடித்து மரியாதை கொடுத்த தல: வைரலாகும் வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி, சப்போர்ட் ஸ்டாப் ஒருவருக்கு சல்யூட் அடித்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் பாதியில் சொதப்பி வந்த கொல்கத்தா, பஞ்சாப் போன்ற அணிகள் இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், பிளே ஆப் சுற்றுக்கு சென்னை, டெல்லியைத் தவிர மூன்று மற்றும் நான்காம் இடத்தை பிடிக்க, அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம நடைபெற்று முடிந்த பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டி முடிந்தவுடன், டோனி மற்றும் அம்பத்தி ராயுடு பேசிக் கொண்டிருந்து வந்த போது, சென்னை அணியின் சப்போர்ட் ஸ்டாப் ஒருவர், இந்த வெற்றிக்கு சல்யூட் அடிக்கும் வகையில், டோனி முன்பு சல்யூட் அடித்தார்.
உடனே டோனியும் பதிலுக்கு சல்யூட், அடிக்க இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.