நான் உலகக்கோப்பையில் விளையாடவில்லை! தோனி சொன்ன பதிலால் எழுந்த சிரிப்பலை.. வீடியோ
உலகக்கோப்பை குறித்து தோனியிடம் கேட்கப்பட்ட பதில்.
அவர் கொடுத்த பதிலால் எழுந்த சிரிப்பலை.
நான் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவில்லை என தோனி பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடர் சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் தோனி 2007, 2009, 2010, 2012, 2014, and 2016 என ஆறு தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர்பில் தோனி பேசிய ஒரு வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
"Iam not playing the world cup". - MS Dhoni in recent interview !! ?#MSDhoni © : @mahakshi4710 pic.twitter.com/3O2ZGtxVbZ
— Nithish MSDian ? (@thebrainofmsd) October 20, 2022
அதில் தோனி ரசிகர்களுடன் உரையாடும் போது நபர் ஒருவர் அவரிடம், நான் உங்களிடம் உலகக் கோப்பை தொடர்பான கேள்வியைக் கேட்கவில்லை என்றால், அவர்கள் என்னை அடித்து நொறுக்குவார்கள் என கூறும் போது தோனி ஒரு அற்புதமான பதிலை கொடுத்தார்.
அதன்படி, நான் உலகக் கோப்பையில் விளையாடவில்லை. அணி ஏற்கனவே கிளம்பி சென்றுவிட்டது என கூறினார்.
இதையடுத்து அங்கிருந்தவர்களின் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் ஆனது.