இமாலய சிக்சர் மூலம் CSK அணியின் வெற்றியை உறுதி செய்த தோனி! மகிழ்ச்சியில் மைதானத்தில் மனைவி, மகள் செய்த செயல்... வைரலாகும் வீடியோ
ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி இலக்கை சிக்ஸர் விளாசி சென்னை அணி கேப்டன் தோனி எட்டிய நிலையில் அதை பார்த்து அவர் மனைவி மற்றும் மகள் மகிழ்ச்சியில் செய்த செயலின் வீடியோ வைரலாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இறுதியில் சென்னை அணி வெற்றிக்கு 2 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் தோனி இமாலய சிக்சர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவர் அடித்த அடியில் பந்தானது மைதானத்தின் கூரைக்கே சென்றுவிட்டது.
"Dhoni finishes off in style".
— PARAM DESAI (@MSDianParam7) September 30, 2021
THE COMEBACK SUPER KINGS#YELLOVE #DHONI
pic.twitter.com/SGW8MGWmT4
வெற்றி இலக்கை சிக்ஸர் விளாசி எட்டுவது தோனியின் வாடிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. ஆனால் சில வருடங்களாக அவர் சரியான பார்மில் இல்லாததால் அவரின் வானவேடிக்கைகளை ரசிகர்கள் பார்க்க முடியாமல் இருந்த நிலையில் தான் இந்த சிக்சர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அதுமட்டுமின்றி தோனி சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற செய்ததும், மைதானத்தில் இருந்த அவரின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவா ஆகியோர் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
இதையடுத்து மகளின் கையை பிடித்து கொண்டு சாக்ஷி அழகாக கை தட்டி ஆரவாரம் செய்தார், இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.