மும்பை வான்கடே மைதானத்தில் தோனிக்கு சிலை! திறந்து வைப்பது யார் தெரியுமா?
2011ம் ஆண்டு உலக கோப்பை நினைவு கூறும் விதமாக வான்கடே மைதானத்தில் தோனிக்கு சிலை அமைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2011 உலக கோப்பை
2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் 28 ஆண்டுகால காத்திருப்பை கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று நிறைவேற்றியது.
இந்த போட்டியில் விக்கெட்டுகள் மலமலவேன சரிந்த போது, ஆட்டத்தின் முக்கியமான சந்தர்ப்பத்தில் முன்னேறி, ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்கள் கேப்டன் தோனி குவித்தது வெற்றிக்கு பெரிதும் உதவியது.
அத்துடன் இலங்கை வீரர் நுவான் குலசேகராவின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு இந்திய அணிக்கு தோனி கோப்பையை பெற்று தந்த தருணம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக மாறியது.
தோனிக்கு சிலை
இந்நிலையில் 2011 உலக கோப்பை இறுதிப் போட்டியில், தோனி அடித்த வரலாற்று சிறப்புமிக்க "Winning Shot" சிக்ஸரை நினைவுகூறும் விதமாக வான்கடே மைதானத்தில் தோனிக்கு சிலை ஒன்றை அமைக்க மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அத்துடன் இந்த சிலையை தோனியே திறந்து வைக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.