சீனிவாசனிடம் தோனி சொன்ன வார்த்தை! ஆரம்பத்திலேயே கேப்டன் பதவியில் இருந்து விலக காரணம்
ஐபிஎல் தொடக்கத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதற்கான காரணத்தை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் கூறியுள்ளார்.
தோனி ராஜினாமா முடிவின் பின்னணி
ஐபிஎல் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த மகேந்திர சிங் தோனி சில நாட்கள் முன் கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.
ஜடேஜா தலைமையில் சென்னை அணி முதல் போட்டியை கொல்கத்தாவுக்கு எதிராக ஆடிய நிலையில் தோல்வியடைந்தது. தோனியின் கேப்டன்சி ராஜினாமா குறித்து பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங், ஜடேஜாவை கேப்டனாக தேர்வு செய்வது தொடர்பாக கடந்த ஆண்டே தோனி விவாதித்தார்.
இது முழுக்க முழுக்க தோனியின் முடிவே. ஜடேஜாவுக்கு சீசன் முழுவதும் கேப்டன் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்று தோனி நினைத்திருக்கலாம். அந்த காரணத்தினாலேயே தொடரின் ஆரம்பத்தில் தனது முடிவை அறிவித்துள்ளார்.
சீனிவாசனிடம் சொன்ன தோனி
அணி உரிமையாளர் சீனிவாசனிடம் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தோனி கூறியிருக்கிறார், அதன்பின்னர் அவர் மூலமாகவே அணிக்கு இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. தோனியின் முடிவை நாங்கள் 100 சதவீதம் மதிக்கிறோம். புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றுருப்பதால் இனி சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.
கேப்டன் பதவி இல்லை என்பதற்காக ஒருவரை நிராகரிக்க முடியாது என கூறியுள்ளார்.