தோனி செய்த அற்புதமான ரன்அவுட்! மிரண்டுபோன பார்வையாளர்கள்..வைரலான வீடியோ
லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ்.தோனி செய்த ரன்அவுட் வைரலாகியுள்ளது.
தோனி விக்கெட் கீப்பிங்
லக்னோவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயென்ட்ஸ் 166 ஓட்டங்கள் எடுத்தது.
இப்போட்டியில் CSK அணித்தலைவர் தோனி கேட்ச், ஸ்டம்பிங், ரன்அவுட் என கீப்பிங்கில் மிரட்டினார்.
குறிப்பாக, அதிரடி காட்டிய அப்துல் சமாத்தை ரன்அவுட் செய்த விதம் பார்வையாளர்களை மிரண்டுபோக செய்தது.
#csk #dhoni mass run out
— Bigg Boss Vignesh (@BiggBossVignesh) April 14, 2025
Idhu Mari Oru Out Pardhadhu Illa 😍😍😍
Next Ball Ku Catch Vera Mari Wicket #pathirana #lsgvscsk pic.twitter.com/qFm7XGQPX1
ரன்அவுட்
20வது ஓவரில் பத்திரனா வைடு பந்தை வீச, அப்துல் சமாத் ரன் ஓடினார். அப்போது தோனி பந்தை பத்திரனாவை நோக்கி எறிய, அது நேராக ஸ்டம்பை தாக்கியது.
இதன்மூலம் கிரீஸை எட்டாத சமாத் ரன்அவுட் ஆனார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |