பாண்டியா வேணாம்! வீட்டுக்கு அனுப்பிடலாம் என்ற தேர்வாளர்கள்.. அவரது திறமையை நம்பி அதரவு தந்து காப்பாற்றிய டோனி
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை சேர்க்காமல் ஊருக்கு அனுப்ப தேர்வாளர்கள் முடிவு செய்த நிலையில் அவருக்கு ஆதரவாக டோனி நின்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டையில் பந்துபட்டதால், காயமடைந்திருப்பாரோ என்ற அச்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த காயமும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து வரும் 30ம் திகதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பந்துவீசாமல் உள்ள ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து போட்டியில் பந்துவீச வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய அணியில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்திக் பாண்டியா தொடர்வது அணிக்குள் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
அணி வீரர்கள் தேர்விலும் சமநிலையற்ற தன்மை நிலவியது. இதையடுத்து, அவரை பந்துவீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் பந்து வீசாததால் அவரை டி20 உலகக்கோப்பை அணியில் வைக்காமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப தேர்வாளர்கள் விரும்பியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் ஹர்திக் பாண்டியாவின் பினிஷிங் திறமையை நம்பி அவருக்கு டோனி ஆதரவளித்தார் என தெரியவந்துள்ளது.