இரண்டு இளம்பெண்களுக்கு தோனி தந்த சர்ப்பரைஸ்! அதிர்ஷ்டசாலிகள் என கூறும் நெட்டிசன்கள்
சிறிய கிராமத்தை சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு தோனி ஒரு சர்ப்பரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் தோனி. இவர் சமீபத்தில் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு கிராமத்திற்கு சென்றிருக்கிறார்.
கிராமத்தில் குறுகலான சாலை இருந்ததால் தோனியின் வாகனம் மெதுவாக சென்றுள்ளது. அப்போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு டீன் ஏஜ் இளம்பெண்கள் தோனியை அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.
அவர்களின் மகிழ்ச்சியை கண்ட தோனி, உடனடியாக காரை நிறுத்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்து சர்ப்பரைஸ் கொடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள தோனியுடன் லட்சக்கணக்கானோர் புகைப்படம் எடுக்க காத்திருக்கும் நிலையில், அந்த இருவரும் உண்மையிலேயே பெரிய அதிர்ஷ்டசாலிகள் தான் என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.