ஓய்வு பெறுவது எப்போது? மௌனம் கலைத்த தோனி
5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணி, 2025 ஐபிஎல் தொடரில், 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியை தழுவி, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
தோனி ஓய்வா?
ஏற்கனவே, தோனிக்கு 43 வயதாகி விட்ட நிலையில், இந்த ஐபிஎல் தொடரே அவருக்கு கடைசி 5தொடராக இருக்கும் என பலரும் கருதி வந்தனர்.
இந்நிலையில், சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் சொதப்பி வரும் நிலையில், தோனி இந்த தொடரில் ஓய்வு பெற வேண்டுமென ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமிருந்து குரல் எழுந்துள்ளது.
இதனையடுத்து, டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவதை பார்க்க முதல்முறையாக தோனியின் பெற்றோர் மைதானத்திற்கு வருகை தந்ததால் தோனி ஓய்வு பெற உள்ளார் என தகவல் பரவியது.
ஆனால் தோனி அவ்வாறு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
"தோனி இன்னும் வலிமையாக தான் இருக்கிறார். அது பற்றி யாருமே அவரிடம் கேட்பதில்லை" என CSK அணியின் பயிற்சியாளர் பிளெமிங் கூறினார்.
உடல்தான் முடிவு செய்யும்
இந்நிலையில் தோனி ஓய்வு குறித்து பேசிய பாட்காஸ்ட் வெளியாகியுள்ளது.
இதில் பேசிய அவர், தற்போது எனக்கு 43 வயதாகிறது. இந்த ஐபிஎல் தொடர் முடியும்போது ஜூலை மாதத்தில் எனக்கு 44 வயதாகும்.
அதன் பிறகு விளையாடுவதா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் அவகாசம் இருக்கும். ஆனால், அதை நான் முடிவு செய்வதில்லை. எனது உடல்தான் முடிவு செய்கிறது" என கூறியுள்ளார்.
இதனால், தோனி உடல்நலத்துடன் இருந்தால், அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |