இது உங்கள் கடைசி போட்டியா..!முடிவெடுப்பதற்கு இன்னும் நாட்கள் உள்ளது: மனம் திறந்த தோனி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் விளையாடுவேனா என்று முடிவெடுப்பதற்கு 8 முதல் 9 மாத கால அவகாசங்கள் எனக்கு இன்னும் இருப்பதாக தோனி தெரிவித்துள்ளார்.
10வது முறையாக இறுதி போட்டிக்கு நுழைந்த CSK
2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 172 ஓட்டங்கள் குவித்து குஜராத் அணிக்கான வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
— Chennai Super Kings (@ChennaiIPL) May 23, 2023
ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 157 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் சென்னை அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது.
அதற்கு இன்னும் நாட்கள் உள்ளது
இந்நிலையில் போட்டியின் வெற்றிக்கு பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, போட்டியின் வெற்றி குறித்தும், அவரது ஓய்வு குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே, இந்த போட்டி தான் சேப்பாக்கம் மைதானத்தில் உங்களுடைய கடைசி போட்டியா? என்று கேப்டன் தோனியின் ஓய்வு தொடர்பாக மறைமுகமான கேள்வியை முன்வைத்தார்.
The Chennai Super Kings Captain - MS Dhoni answers ???? question again ?#TATAIPL | #Qualifier1 | #GTvCSK | @msdhoni | @ChennaiIPL pic.twitter.com/drlIpcg5Q5
— IndianPremierLeague (@IPL) May 23, 2023
அப்போது அதற்கு பதிலளித்த தோனி, புன்னகையுடன் அது பற்றி முடிவெடுக்க 8 முதல் 9 மாத கால அவகாசங்கள் எனக்கு இன்னும் உள்ளன. எனவே இப்போதே எதற்கு அதைப் பற்றி யோசிக்க வேண்டும், டிசம்பரில் மினி ஏலம் வேறு நடைபெற உள்ளது.
எனவே அடுத்த ஐபிஎல்-லில் விளையாடுவேனா அல்லது வேறு ஏதேனும் முக்கிய பொறுப்பில் இருப்பேனா என்று எனக்கு இப்போது தெரியவில்லை, ஆனால் சிஎஸ்கே அணியின் முக்கிய அங்கமாக தொடர்ந்து இருப்பேன் என பதிலளித்தார்.