அஸ்வினோடு சேர்த்து இந்த தமிழக வீரரையும் CSK அணியில் எடுங்க! டோனி எடுத்த ஆச்சரிய முடிவு
ஐபிஎல் மெகா ஏலத்தில் அஸ்வினுடன் சேர்த்து வேறு சில தமிழக வீரர்களையும் சிஎஸ்கே அணியில் சேர்க்க டோனி விருப்பம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழக வீரர் அஸ்வினை சிஎஸ்கே அணி எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
ஏனெனில் இவர் 2009 முதல் 2015 வரை 97 போட்டிகளில் சிஎஸ்கேவுகாக விளையாடியுள்ளார். இந்த நிலையில் ஷாருக்கான் மற்றும் வாஷிங்கடன் சுந்தரையும் அணியில் எடுக்க டோனி விரும்புவதாக தெரியவந்துள்ளது.
அவரின் இந்த முடிவு விரைவில் நடக்கவுள்ள ஏலத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கலாம். சென்னை அணிக்கு டோனியை போன்று நல்ல ஃபினிஷர் தேவைப்படுகிறார். அதற்கேற்றார் போல தான் ஷாருக்கானின் ஆட்டங்கள் அமைந்திருந்தன.
சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை இறுதிப்போட்டியில் அவரின் அதிரடியால் தான் தமிழக அணி கோப்பை வென்றது.
வாஷிங்டன் சுந்தர் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்யக்கூடியவர். இதே போல இவரை அணிக்குள் சேர்த்தால் சிஎஸ்கேவின் பேட்டிங் ஆழம் மிக நீண்டதாக இருக்கும் என கருதப்படுகிறது.