பினிஷிங் செய்த டோனி! கண்கலங்கிய மனைவி சாக்ஷி : நெகிழ்ச்சி வீடியோ
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் டோனி பினிஷிங் செய்த நிலையில், அவருடைய மனைவி சாக்ஷி கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆப் போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக கடைசி கட்டத்தில் இறங்கிய டோனி 6 பந்தில் 16 ஓட்டங்கள் குவித்தார்.
Sakshi mam literally cried in the last over wen MS hitting those boundaries… man wat a match tho ? Love Yu Thala @msdhoni ? pic.twitter.com/EPJeB1953Y
— Yash??? (@YashR066) October 10, 2021
இந்த போட்டியில் டோனியின் பழைய பேட்டிங் ஸ்டைலை பார்க்க முடிந்தது. இந்த ஐபிஎல் தொடரில் எந்த ஒரு போட்டியையும் முடித்து கொடுக்க முடியாமல் திணறி வந்த டோனி, இந்த முறை, இக்கட்டான சூழ்நிலையில் வந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.
The finisher ??? pic.twitter.com/kqzQOBHrDk
— Gaurav Chandna? (@Baadshah_4005) October 10, 2021
இதை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் மைதானத்தில் இந்த போட்டியைக் கண்ட அவரின் மனைவி சாக்ஷி அருகில் இருந்த மகள் ஜுவாவை கட்டியணைத்து, கண்ணீர்விட்டு அழுது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஏனெனில் டோனியை அந்தளவிற்கு பலரும் இப்போது வரை விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த விமர்சனத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல் டோனி, மீண்டும் ஒரு பினிஷர் என்பதை நிரூபித்துள்ளதால், அதைக் கண்டு அவர் கண்கலங்கியிருக்கலாம் என்று ரசிகர்களால் யூகிக்கப்படுகிறது.