சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற டோனி ஐபிஎல்லில் CSK அணியில் தொடருவாரா? வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்வார் என அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட டோனி ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
ஐபில் தொடங்கியது முதலே சென்னை அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இடையில் சென்னை அணி தடை செய்யப்பட்டபோது புனே அணிக்குத் தலைமையேற்றார். மீண்டும் சென்னை அணிக்கு அனுமதி கிடைத்ததும் அதில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் டோனி முழுத் தகுதியுடன் இருப்பதாகவும், அவரை அணியில் இருந்து விடுவிக்க வேண்டிய காரணம் ஒன்றுமில்லை என்றும் சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.