சென்னை எனக்கு இன்னொரு வீடு: நெகிழ்ந்த தோனி
தமிழகத்தில் கிரிக்கெட் சங்க விழாவில் கலந்துகொண்ட தோனி, சென்னையை இன்னொரு வீடாக நினைப்பதாக கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி, தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க விழாவில் கலந்துகொண்ட அவர் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், 'மாவட்ட கிரிக்கெட் சங்க விழாவில் நான் பங்கேற்பது இதுதான் முதல் முறையாகும். சென்னையில் இருந்தபடி எனது ரஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன். சென்னையை எனது இன்னொரு வீடாக கருதுகிறேன்.
பள்ளி அளவிலான போட்டிகளில் இருந்தே நான் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் வீரர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்பது பெருமையானது' என தெரிவித்தார்.
#ThalaDharisanam at Namma Singara Chennai! All smiles and happy vibes ?#WhistlePodu #Yellove ? pic.twitter.com/hSFhsZul1O
— Chennai Super Kings (@ChennaiIPL) June 1, 2022
மேலும் பேசிய அவர், ஒரு வீரர் தனது மாவட்டத்திற்காகவும், பள்ளிக்காகவும் விளையாடுவதன் மூலமே பெரிய அளவில் ஜொலிக்க முடியும். மாவட்ட கிரிக்கெட் என்பது அனைவர்க்கும் முக்கியமானது என தெரிவித்தார்.
அத்துடன் கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் என்றும், ரஞ்சி மற்றும் ஐபிஎல் போல் இந்திய அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
Photo Credit: PTI