ரூ.600 கோடி சொத்துக்களை விட்டுவிட்டு துறவியான தொழிலதிபர்.., யார் அவர்?
ரூ.600 கோடி சொத்து மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை விட்டு விட்டு தொழிலதிபர் ஒருவர் துறவியாக மாறியுள்ளார்.
யார் இவர்?
சர்வதேச வர்த்தக நிறுவனமான DR International நிறுவனர் Raghunath Doshi. இவரை தனது தந்தையிடம் இருந்து ரூ.30,000 பெற்று தனது வணிகத்தை தொடங்கினார். இவர் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான விழாவில், ஒரு ஜெயின் ஆச்சார்யாவின் 108வது சீடராக மாறினார்.
இந்த விழாவில் பெரும் தொழிலதிபருமான Gautam Adhani -யும் கலந்து கொண்டார். பல கோடி ரூபாய் சொத்துக்களை கொண்ட Raghunath Doshi, 2015 -ம் ஆண்டில் அதையெல்லாம் விட்டுவிட்டு சந்நியாசியாக துறவறம் பூண்டார்.
அவர் இந்த முடிவை எடுப்பதற்கு ஜைன மதத்தையும், ஜைன அறிவுறைகளை 30 ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றி இறுதியாக இந்த முக்கியமான முடிவை எடுத்தார். மேலும் இவரை துறவறத்துக்கு மாறியதைக் குறிக்கும் விழா மறக்க முடியாதது.
அரண்மனை முழுக்க தங்கம், வைரம்.. இருந்தாலும் விஷம் வைத்து கொன்றுவிடுவார்கள் என்ற பயம்: யார் இந்த பணக்காரர்?
3.25 லட்சம் சதுர அடி பரப்பளவில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் சுமார் 1.5 லட்சம் பார்வையாளர்கள் 1,000 சாதுக்கள் மற்றும் சாத்விகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது.
ரூ.600 கோடி சொத்துக்கள்
பிளாஸ்டிக் கிங் என்று அழைக்கப்படும் Raghunath Doshi -யின் DR International நிறுவனம் 1976-ம் ஆண்டு பன்வர்லால் ஜெயினால் தொடங்கப்பட்டது. பல்வேறு வகையான பிளாஸ்டிக் மூலப்பொருட்களைக் கையாளும் முன்னணி வர்த்தக நிறுவனமாக டிஆர் இண்டர்நேஷனல் விளங்குகிறது.
தொழில்துறையில் தனக்கென்று இடம் பிடித்த DR International நிறுவனத்தின் வருவாய் தற்போது ரூ.700 கோடியை தாண்டியுள்ளது. குஜராத்தில், நாடு தழுவிய தொழில்களுக்குத் தேவையானவற்றை வழங்குவதற்காக D.R.PLASTOTECH PVT என்ற பெயரில் உற்பத்தி அமைப்பை நிறுவியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |