கார்கில் போர் வீரரான என் அப்பாவுக்காக இதை செய்தேன்! முதல் அரைசதம் விளாசிய RR வீரர்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியதை, தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக ஜூரெல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஐபிஎல்லின் நேற்றையப் போட்டியில் லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது.
LSG நிர்ணயித்த 197 ஓட்டங்கள் இலக்கினை நோக்கி களமிறங்கிய RR அணியில், சஞ்சு சாம்சன் 71 (33) ஓட்டங்களும், துருவ் ஜூரெல் 52 (34) ஓட்டங்களும் விளாசி அணியை வெற்றி பெற வைத்தனர்.
Dhruv tujhe salaam ?? pic.twitter.com/LobcShFtuX
— Rajasthan Royals (@rajasthanroyals) April 27, 2024
இதில் துருவ் ஜூரெல் எடுத்த 52 ஓட்டங்கள் ஐபிஎல் தொடரில் அவரது முதல் அரைசதம் ஆகும். போட்டிக்கு பின்னர் ஜூரெல் தனது தாய், தந்தையுடன் வெற்றி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''நேற்று என் அப்பா என்னுடன் பேசினார், அவர் மறைமுகமாக எனக்கு ஒருமுறை சல்யூட் காட்டு என்று கூறினார். அவர் கார்கில் போரில் வீரராக இருந்ததால், அவருடன் எனது கொண்டாட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன்.
எனக்கு குழப்பமாக இருக்கும்போதெல்லாம், நான் அவரிடம் பேசுவேன். அவர் என்னை வழிநடத்துகிறார். அவர் என் ஹீரோ. நான் அதை (அரைசதம்) என் தந்தைக்காக செய்கிறேன். டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்காக அதை செய்தேன். அவர் இன்று மைதானத்தில் இருந்தார், அது அவருக்கு கொண்டாட்டமாக இருந்தது'' என்றார்.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 27, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |