அப்பா நல்லாருக்கார், வதந்திகளை நம்ப வேண்டாம்: விக்ரமின் மகன் துருவ்
நடிகர் விக்ரம் நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் துருவ் விக்ரம் கூறியுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், விக்ரமின் மகன் துருவ் தனது தந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதாள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'லேசான நெஞ்சு வலி காரணமாக என் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வதந்திகளை நம்ப வேண்டாம் ஏன் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.