2 ரூபாயில் கோடீஸ்வரர்கள்! பல மடங்கு வருமானத்தை அளித்த பங்கு
பங்குச்சந்தையில் ஒரு சிறிய முதலீட்டு பங்கு, ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு வருமானத்தை கொடுத்துள்ளது.
பங்குச்சந்தையில் Multibagger Penny பங்குகள் கூட நல்ல லாபம் தரக்கூடியது. இதில் சிறிய முதலீடு பாரிய அளவில் வருமானத்தை அளிக்கும் என்பதால், அவற்றில் ஒன்றுதான் Dhruva Capital Services.
இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை கொடுத்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் இதன் பங்கு (Share) 1.95 ரூபாயில் இருந்து 215 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் இந்த பங்கு 33 ரூபாயில் இருந்து 215 ஆக மாறியது. அப்போது இதன் வருமானம் 550 சதவீதம் ஆகும்.
ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் இதன் விலை வெறும் 6 ரூபாயாகதான் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன் இதில் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.10 கோடியாக உயர்ந்திருக்கும்.
இந்த நிலையில், NBFC நிறுவனமான Dhruva Capital Services Ltd, கடந்த 12ஆம் திகதி தனது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதில் நிகர லாபம் 69.23 சதவீதம் சரிந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை 93.75 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் 2 ரூபாய் பங்கு முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. இருப்பினும் வியாழக்கிழமை பிப்ரவரி 13 அன்று, பங்கின் மதிப்பு கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன்பு உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |